இலக்கிய பங்களிப்பு
திலகபாமா பெண்ணியக் கருத்துக்களையும் சமூகக் கருத்துக்களையும் உரத்தகுரலில் வெளிப்படுத்தும் கவிதைகளையும் கதைகளையும் எழுதிவருகிறார்.
தமிழ் இலக்கியச் சூழலில் 10 கவிதைத் தொகுப்புகளும், 2 நாவல்களும், 3 சிறுகதைத் தொகுப்புகளும், 2 கட்டுரை நூல்களும், மேலும், தமிழின் ஆகச்சிறந்த அரசியல் ஆளுமைகளான சௌந்தரபாண்டியனார், பொன்னம்மாள் அவர்களுடைய வாழ்வியல் சரிதத்தையும் எழுதியிருக்கிறார்.


மக்களுக்கான போராட்டங்கள்
- 2017ம் ஆண்டு மே-5 ம் தேதி சிவகாசி ஜக்கம்மாள் கோயில் அருகே அமைக்கப்பட்ட பாருடன் கூடிய டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி அப்பகுதி பெண்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்தினார். போராட்டத்தின் எழுச்சியால் பெண்கள் மதுக்கடையை அடித்து, உடைத்து தீயிட்டு கொளுத்தினர்.
- 2020ல் திருச்சியில் காவிரி நீரின் உபரி நீரை ஏரிகளில் நிரப்பக்கோரி பாமக சார்பில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் பெரும் திரளான விவசாயிகளையும், மக்களையும் ஒன்று திரட்டினார்.
- கடந்த ஆண்டு வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டு போராட்டம் உச்சத்தில் இருந்தது. அப்போது5 சதவீத இட ஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்தக்கோரி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தினார்.
- 2022ம் ஆண்டு விருதுநகரில் 22 வயதான தாழ்த்தப்பட்ட இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய நபர்களை கைது செய்ய வலியுறுத்தி 200 பெண்களை திரட்டி போராட்டம் நடத்தினார்.
- 2023ம் ஆண்டு கடும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி பகுதி மக்களுக்கு உணவு, மருந்து உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.
திலகபாமாவின் பங்களிப்பு
- அரசியல்
- சமூகம்
- 2023ல் மதுரையில் பாமக சார்பில் மாபெரும் பெண்கள் சமூக நீதி கருத்தரங்கு நடந்தது. பசுமை தாயகம் தலைவர் சவுமியா அன்புமணி, நிறுவன தலைவர் ராமதாஸ், மாநில தலைவர் ஜி.கே.மணி பங்கேற்றனர். தனது ஏற்பாட்டில் நடந்த கருத்தரங்கில் ஆயிரக்கணக்கான பெண்களை திரட்டி காட்டினார்.
- தென்மாவட்டங்களில் பாட்டாளி மக்கள் கட்சியை பலப்படுத்தும் வகையில் சிவகாசி, விருதுநகர், திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியுள்ளார்.
- திண்டுக்கல் ஒன்றிய பகுதிகளான பொன்னகரம், தாமரைப்பாடி, அனுமந்தநகர், கொத்தம்பட்டி, வேடப்பட்டி, சிறுமலைபிரிவு, நல்லாம்பட்டி, ம.மூ.கோவிலூர் பிரிவு, தோமையார்புரம் உள்ளிட்ட பகுதிகளில் பாமக கொடியேற்று விழாவை நடத்தியுள்ளார்.
- தன்னைப் போலவே ஏராளமான பெண்களை பாமகவில் இணைக்கும் நோக்கத்துடன் மகளிர் சங்க நிர்வாகிகளின் கூட்டங்களை நடத்தியுள்ளார்.
- 2018ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கிராமிய சபையில் கிராமப்புற பெண்களுக்கான முன்னேற்றம் குறித்து உரையாற்றியுள்ளார்.
- ஆத்தூர் மாவட்டம் கொழிச்சாமலை கிராமத்தில் வசிக்கும் 5 பழங்குடியின மக்களுக்கு தனது சொந்த செலவில் வீடு கட்டிக்கொடுத்துள்ளார்.
- திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து ரத்த தானம் செய்து வருபவர்களை ஊக்குவிக்கும் விதமாக தனது மதி ரத்த மையம் சார்பில் குருதிக்கொடை விழாவை நடத்தியுள்ளார்.
- ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிகரித்து வரும் கந்து வட்டி குண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.


தேர்தல் வரலாறு
- 2016ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் பாமக தனித்து போட்டியிட்டது. அப்போது சிவகாசி சட்டமன்ற தொகுதி வேட்பாளராக திலகபாமா போட்டியிட்டார்.
- 2021ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலை அதிமுக, பாஜக கூட்டணியில் இணைந்து பாமக தேர்தலை எதிர்கொண்டது. அப்போது திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் பாமக சார்பில் களமிறக்கப்பட்டார்.